ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மசூதி அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது பற்றி காபூல் காவல்துறையினர் பேசிய போது காபுலில் ஒரு மசூதி அருகே நெடுஞ்சாலையில் குண்டு வெடித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலையில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் இதில் நான்கு பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்ற நிலையில் ஐ எஸ் பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட சில பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றன.