பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது. மேலும் படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். தற்பொழுது படத்தின் பிரமோஷன் பணிகள் விருவிருப்பாக நடந்து வருகின்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தேவராளன் ஆட்டம் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கின்றது. வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்தப்பாடல் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.