நடிகை தனுஸ்ரீ இந்திய மாடல் அழகி மட்டுமல்லாமல், நடிகையும் ஆவார். இவர் தமிழ், இந்தி தெலுங்கு என்று பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் விஷாலின் “தீராத விளையாட்டுப் பிள்ளை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்நிலையில் இவர் தன்னை கொல்லை முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், தனது காரின் பிரேக் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும், அதனால் பெரும் விபத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளார். அதேபோல், தன்னை விஷம் வைத்து கொல்ல சதி நடப்பதாகவும் பகீர் கிளப்பும் புகாரை தெரிவித்துள்ளார்.