அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இதனிடையே அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதனால் இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ் அடுத்தடுத்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். மறுபிறம் ஓபிஎஸ் தரப்பு தனது அடுத்த மூவ்வில் இறங்கியுள்ளது.அதிமுகவில் தலைவரை தொண்டர்கள் தான் தேர்வு செய்வார்கள் என்று விதி உள்ளதாம்.இதனால் அதை வைத்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் ஈபிஎஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு வைக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.