Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvENG : பென் டக்கெட், ஹாரி ப்ரூக் அதிரடி…. பாகிஸ்தானை வென்று அசத்திய இங்கிலாந்து..!!

2ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்தும், 2ஆவது போட்டியில் பாகிஸ்தானும் வென்றுள்ள நிலையில், 1-1 என சம நிலையில் இரு அணிகளும் இருக்கிறது.. இந்நிலையில் 3ஆவது டி20 போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச முடிவு செய்தார்..

அதன்படி இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் களம் இறங்கினர்.. முகமது ஹஸ்னைன் வீசிய 2ஆவது ஓவரில் 8 ரன்கள் எடுத்த பில் சால்ட் முகமது நவாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்கவீரர் வில் ஜாக்ஸ் அதிரடியாக 22 பந்துகளில் 40 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.. அதன் பின் வந்த டேவிட் மலான் 14 ரன்களில் வெளியேறினார்..

அதன் பின் பென் டக்கெட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.. இந்த ஜோடியை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.. இருவரும் சிறப்பாக ஆடினர்.. தொடர்ந்து சிக்சர் மழைகளை பொழிந்த ப்ரூக் 35 பந்துகளில் (8 பவுண்டரி, 5 சிக்ஸர்) உடன் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.. அதேபோல மற்றொரு வீரர் பென் டக்கெட்டம்  42 பந்துகளில் (8 பவுண்டரி, 1 சிக்சர்)  70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்..

இறுதியில் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழந்து 221 ரன்கள் குவித்தது.. பின் 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் களமிறங்கினர்.. கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இம்முறை நிலைக்கவில்லை.. இருவரும் தலா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.. அணியின் அஸ்திவாரமாக பார்க்கப்படும் இருவரும் சரிந்த பின், வந்த ஹைதர் அலி 3,  இப்திகார் அகமது 6, முகமது நவாஸ் 19 என சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இருப்பினும் சான் மசூத் மட்டும் மறுபுறம் நிலையாக ஆடினார். மேலும் குஷ்தில் ஷா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.. இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சான் மசூத் 40 பந்துகளில் 65 ரன்களுடன் களத்தில் இருந்தார்.. இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்..  இதனால்  63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி  2: 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது..

 

Categories

Tech |