பேருந்து நிலையத்தில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் திரு பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே 35 மதிக்கத்தக்க நபர் அங்குமிங்கும் நடந்து சென்றார். அந்த நபர் போதை தலைக்கேறிய நிலையில் சாராய பாக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகளை வழிமறித்து ரகளை செய்துள்ளார்.
இதனை அடுத்து அந்த நபர் பேருந்துகளை அங்கிருந்து செல்ல விடாமல் தகாத வார்த்தைகளால் பேசி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.