Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. சுவர் இடிந்து விழுந்து “வீட்டின் உரிமையாளர் மற்றும் நாய் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சுவர் இடிந்து விழுந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் நாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை  பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலிகர் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக கன மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த மாவட்ட ஆட்சியர் வீர் சிங் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவித்தார். மேலும் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

அப்போது அதில் தூங்கிக் கொண்டிருந்த 9  பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இவர்களது சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் 9 பேரையும்  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும்  அவரது வளர்ப்பு நாய் இடிபாடுகளுக்குள்  சிக்கி உயிரிழந்தனர். மேலும் இந்த கனமழையால் மாநிலத்தில் இதுவரை சுவர் இடிந்து விழுந்து மட்டும் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |