Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைப்பு… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!!!!

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்கரி நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக பைனான்சியர் அன்புச் செழியன் இடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடனை அடைத்த லைக்கா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமலேயே வீரமே வாகை சூடும் எனும் படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கி ஒன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜரான விஷால் இந்த உத்தரவை எதிர்த்து லைக்கா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை எனவும் தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனை அடைப்பதற்கு படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து விஷாலின் விளக்கத்தையும் அவரது சொத்து விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் மீண்டும் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி எம் சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற உத்தரவுப்படி சொத்து விவரங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடிகர் விஷால் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது 15 கோடியை வங்கியில் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு அடுத்த மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது. அதனால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என விஷால் தரப்பு கூறி உள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Categories

Tech |