புதிய புகைப்படங்களை பகிர்ந்த அதிதியிடம் அந்த ஒரு கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றார்கள்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் டான்ஸிலும் அதிதி கலக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இந்த நிலையில் நடிகை அதிதி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிங்க் நிற லெஹாங்கா அணிந்து, அளவான மேக்கப் என மனதை கொள்ளையடிக்க வைக்கின்றார். இதை பார்த்த நெட்டிஷன்கள் ஆர்டின்களை பறக்க விட்டு வருகின்றார்கள். மேலும் விஜய் அண்ணாவுடன் எப்பொழுது நடிப்பீர்கள் என கேட்டு வருகின்றார்கள்.
https://www.instagram.com/p/CixOhxuBoKc/?utm_source=ig_embed&ig_rid=fb4be4ae-6b81-4399-82d1-ed0e1fbb9c92