Categories
சினிமா

“கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல்”…. பிரபல நடிகரை புகழ்ந்து பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்….

தமிழ் சினிமாவில் 1989 ஆம் ஆண்டு வெளியான “புதிய பாதை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான புது முயற்சிகளை செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. பார்த்திபன் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவரின் சமூக வலைதளப் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், “இன்று மாலை … ஆண்களில் ஷாரூக்கான் பெண்களில் கத்ரீனா கைஃப் இருவரையும் பிரமிக்க செய்து கொண்டிருப்பவரை சந்தித்தேன். நேசிக்கும் கிளியும்,வாசிக்கும் பியானாவும்,யோசிக்கும் புதிய மார்க்கமாய் கண்டு ரசித்தேன் ரம்யமாய். கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல். கடலாய் இருவருக்குமே அறிவின் அலை கரை நீள்கிறது. பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். நேசிக்கக் விரும்புகவர்களை நெருங்கக் கூடாதென்பார்கள்.நெருங்கியப் பின்னும் அதிநேசம் கொள்பவராய் இருந்தார். தித்திப்பின் சுவை நாவினில். சந்திப்பின் தித்திப்பு அதை அசை போடுகையில்…” என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு விஜய் சேதுபதியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

Categories

Tech |