Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது என்ன கலர்….. “தர்பூசணி மாதிரி இருக்கு”…. தங்களது அணியை தானே கலாய்த்த பாக் வீரர்..!!

“பாகிஸ்தானின் டி20 உலகக் கோப்பை ஜெர்சி தர்பூசணி போல் தெரிகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கலாய்த்துள்ளார்..

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாட உள்ள அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா தனது புதிய ஜெர்சியை அறிவித்தபோது பாக் ரசிகர்கள் கலாய்த்தனர்.. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் இந்தியா அறிவித்த அடுத்த நாளே புது ஜெர்சியை அறிமுகம் செய்தது.. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்..

அதாவது, தர்பூசணி பழத்தை பார்த்து ஜெர்சியை தேர்வு செய்ததாகவும், பார்ப்பதற்கு அப்படியே தர்பூசணி போல இருப்பதாகவும் இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் நியூ ஜெர்சியை அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரரும் ‘தர்பூசணி’ பழத்துடன் தொடர்பு படுத்தி கலாய்த்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய ஜெர்ஸி குறித்து அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில், ஜெர்சி வீரர்கள் ஒரு பழக்கடையில் நிற்பது போல் தெரிகிறது. இந்த நிறத்திற்கு பதிலாக சரியான அடர் பச்சை நிறத்தில் ஜெர்சியை தேர்வு செய்திருக்க வேண்டும். இது நீங்கள் ஒரு பழக் கடையில் நிற்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.

டி20 உலகக் கோப்பை 2022 தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20ஐ தொடரில் பாகிஸ்தான் அணி மும்முரமாக தயாராகி வருகிறது. சொந்த மண்ணில் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் அணியை கனேரியா உட்பட பலரும்  விமர்சனம் செய்த நிலையில், நேற்றைய 2ஆவது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |