Categories
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 31  மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி வேன் பார்வதிநகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்து இருந்த 7வயது சிறுமி ரியோனா திடீரென கதவு உடைந்து வேனில் இருந்து கீழேவிழுந்தார். இதனால் சிறுமிக்கு முகம், கை, கால் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

உடனே அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிறுமிக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். பள்ளி வாகனத்தை ஓட்டிச்சென்ற வெங்கட்ராமன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெற்றோர்கள், மற்ற மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் சிறுமி சாலையில் விழுந்தபோது பின்புறம் எந்த வாகனமும் வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி வாகனத்தில் எமர்ஜென்சி கதவு உடைந்து உள்ளதை பார்க்காமல் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் மீதும், பள்ளியின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வாகனம் முறையான பராமரிப்பு இன்றி இருந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தில் துருப்பிடித்திருந்த எமர்ஜென்சி கதவு, வேகத்தடையை கடக்க முயலும்போது கழன்று அருகிலிருந்த காரின் மீது விழுந்ததும் தெரியவந்தது.

Categories

Tech |