Categories
உலக செய்திகள்

இனி அதெல்லாம் கட்…! எல்லாரும் வாரத்தில் 3 நாட்களாவது….. ஊழியர்களுக்கு TCS முக்கிய அறிவிப்பு….!!!!!

TCS நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் லட்சிய கனவாக உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் வீட்டில் இருந்து வேலை செய்யும் பணியாளர்களின் வொர்க் பிரம் ஹோம் சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்னும் அதே நிலை தொடர்கிறது.

இந்த நிலையில் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்தில் வந்து வேலை செய்யுமாறு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் உயர்மட்ட ஊழியர்கள் ஏற்கனவே அலுவலகத்தில் வந்து பணிபுரிந்து வருவதாகவும், வாடிக்கையாளர்களும் TCS அலுவலகங்களுக்கு சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |