Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

டே நைட் – விமர்சனம்

டே  நைட்

நடிகர்                                  :        ஆதர்ஷ் புல்லனிகட்

நடிகை                                :        அன்னம் ஷாஜன்

இயக்குனர்                       :         என்.கே.கண்டி

ஒளிப்பதிவாளர்            :          அரி சென்

இசையமைப்பாளர்     :          அரவிந்த்

விமர்சனம் 

ஆஸ்திரேலியாவில் இருக்கும் காதலன் ஆதர்ஷை தேடி காதலி அன்னம் ஷாஜன் செல்கிறார். நாயகன் நாயகி இருவரும் காதலித்து வரும் வேளையில் நாயகனுக்கு விபத்தின் மூலம் பணம் கிடைக்கின்றது. கிடைத்த பணத்தினால் நாயகனுக்கு பல பிரச்சனைகள் வருகின்றது. இந்நிலையில்  நாயகி அன்னம் ஷாஜன் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். நாயகி இறந்து ஒரு வருடங்கள் கழித்து நாயகனுக்கு அழைப்பு ஒன்று வர அழைத்தது அன்னம் ஷாஜன்  என தெரிந்து அதிர்ச்சி அடைகிறான் ஆதர்ஷ். அதன் பின்னர் நாயகி உயிருடன் இருப்பதாக எண்ணி அன்னம் ஷாஜனை தேடி செல்கிறார் நாயகன். நாயகியை கண்டுபிடித்தாரா? அன்னம் ஷாஜன் உயிருடன்தான் இருக்கிறாரா?  என்பதுதான் டே நைட் படத்தின் மீதிக்கதை

 

புதுமுக நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் நடிப்பில் முதிர்ச்சியை காட்டு நடித்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் அண்ணன் சாஜன் பயத்தை வெளிப்படுத்தி கவனிக்க வைத்துள்ளார். திரைப்படத்தை திரில்லர் பாணியில்   இயக்கியிருக்கிறார் இயக்குனர் என் கே கண்டி. திரைப்படத்தின் காட்சிகளைப் பார்க்கும் பொழுது குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படம் போல் தெரியவில்லை. முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர்  நடித்துள்ளார். அரியின்  இசையும் அரவிந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் டே  நைட்  திரில்லர் திரைப்படம்.

Categories

Tech |