Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட்ட தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல துறைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் தொழில்நுட்ப மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றது போல ரயில்வே துறையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தற்போது அப்டேட் ஆகி வருகின்றது. அவ்வகையில் ரயில் நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தற்போது புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது வரை 8,878 நிறுவனங்களில் மின்னணு பண பரிவர்த்தனைகளுக்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் விலையை அச்சிட்டு கொடுக்க கையடக்க இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை 596 ரயில்களில் 3081 கையடக்க விற்பனை பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தவிர 4316 உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த இயந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக இ கேட்டரிங் வசதியை இந்திய ரயில்வே தற்போது அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.இதன் மூலமாக ரயில் பயணிகள் பயணச்சீட்டு மூலம் முன்பதிவு செய்யும்போதே தேவையான உணவுகளை தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இல்லையென்றால் பயணம் செய்யும்போது செயலி அல்லது சேவை மையம் மூலமாக அல்லது 1323 என்ற எண் மூலமாக உணவுகளை முன் பதிவு செய்து கொள்ள முடியும். இதற்காக 310 ரயில் நிலையங்களில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Categories

Tech |