Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் விவரங்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலரும் உயர் கல்வி தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி இயக்குனர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் அனைவரும் சேர்ந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.ஒருவேளை உயர் கல்வியில் சேரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு காரணத்தை கேட்டறிய வேண்டும். அவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திட தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும்.

79762 மாணவர்களின் விவரங்களில் 8, 588 மாணவர்கள் உயர்கல்வியில் இதுவரை சேரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு உடனே ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |