திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று பணியாற்று ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஊழியர்களை அவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கை, கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். திமுக எம்எல்ஏவின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில், அரசு அதிகாரிகளை மீரட்டுவது, காவல்துறையினை மிரட்டுவது, ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவது என்ற வரிசையில் தற்போது காவல்துறைக்குள்ள அதிகாரத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் பயன்படுத்தியிருப்பதை பார்க்கும்போது தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும், ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடிகட்டி பறக்கின்றது என்பதும் தெளிவாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் தலைமலை நகரை அடுத்த மெல்ரோசபுரம் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியா நிறுவனம், தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வணிகம் செய்து வருவதாகவும், குத்தகை காலம் முடிவடையாத நிலையில் இடத்தை காலி செய்து தர முடியாது என்று தனியார் நிறுவனம் தெரிவித்து விட்டதாகவும், இது குறித்து காவல்நிலத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் நிறுவன அதிகாரியை தொலைபேசியில் அழைத்து இடத்தை காலி செய்யும் மருத்துவ எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மிரட்டும் தோனியில் கேட்டுக் கொண்டதாக கடந்த இரு தினங்களுக்கு முன் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. இது குறித்த வீடியோவும் சமூக வேலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்ட ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல் சட்ட ஒழுங்கு சீரழிக்கு வழிவகுக்கும். எனவே நீதிமன்றம் மூலம் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளில் ஆளும் கட்சியினர் தலையிடாமல் இருக்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.