Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் மோதிய வாகனம்….. தூக்கி வீசப்பட்ட நண்பர்கள்…. மரணமடைந்த துயரம்…

விபத்து ஏற்பட்டு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குள்ளம் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக  உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நண்பர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |