பிரத்தானிய மகாராணியார் மறைந்த அன்று ஹரி மட்டும் குடும்பத்துடன் சாப்பிட அனுமதிக்கப்படாமல் அவருக்கு தனியாக உணவளிக்கப்பட்ட விஷயம் பற்றிய செய்தி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மகாராணி அவரின் மறைவை தொடர்ந்து ஹரி புறக்கணிக்கப்படுகிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் பல செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. முதலில் ராணுவ சீருடை அணிய அவருக்கு அனுமதி இல்லை எனவும் அதன் பின் சீருடை மாற்றம் ஏற்பட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இளவரசர் ஹரி மேகனை திருமணம் செய்து கொண்டு அரண்மனைக்கு வந்ததிலிருந்து ராஜ குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது. ஒரு காலகட்டத்தில் மகாராணியார் தலையிட்டு ஹரியை கண்டிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதன் பின் ஹரி பெரியவர்களை கேட்காமலே வீட்டை விட்டும் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
அதன் பிறகும் மேகம் சும்மா இருக்கவில்லை அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ராஜ குடும்பத்தை அவமதிக்கும் விதமாக பேட்டி அளித்துள்ளார். மக்கள் நேரடியாக இளவரசர் வில்லியமிடம் ராஜ குடும்பத்தில் இனவெறியாளர்கள் யாராவது இருக்கின்றார்களா என கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. இப்படி மேலும் மேலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேகம் ராணியாரின் இறுதி சடங்கில் அவரை காண வரக்கூடாது அது முறையாக இருக்காது என தெரிவித்துள்ளார் அப்போதய இளவரசரும் இப்போதைய மன்னருமான சார்லஸ். அதனால்தான் கோபப்பட்டு கொண்டே தன் தந்தையுடன் சாப்பிட மறுத்து இருக்கிறார்கள். ஹரி தங்களுடன் சாப்பிட ஹரிக்கு சார்லஸ் அழைப்பு விடுத்தும் ஹரிதான் தன் மனைவிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற கோபத்தில் தந்தையுடன் சாப்பிடுவதை புறக்கணித்து உள்ளாரே ஓழிய அவர் புறக்கணிக்கப்படவில்லையாம் மன்னருடைய அழைப்பை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள தக்க ஒன்று அல்ல.
ஆனாலும் அதற்கு பின்பு மகாராணியாருக்கு மக்கள் மலர்கள் மூலம் அஞ்சலி செலுத்தும் காட்சிகளை காண ஹரிக்குக்கும் மேகக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் இளவரசர் வில்லியம். அதேபோல் ஹரிக்கு ராணுவ சீருடை வழங்க அனுமதிப்பது பற்றி சர்ச்சை உருவான நிலையில் மகாராணியாரின் மற்ற ஏழு பேரப்பிள்ளைகளுடன் ஹரியும் இணைந்து சீருடை அணிந்து அஞ்சலி செலுத்த அனுமதி அளித்துள்ளார் மன்னர் சார்லஸ் ஹரி புறக்கணிக்கப்படுகிறார் என்று சொல்வதை விட ராஜ குடும்ப மரபுகளை மீறியதன் பலனை ஒரு விவாகரத்தான அமெரிக்க பெண்ணை திருமணம் செய்ததன் பலனை தற்போது அனுபவிக்கிறார் என்று வேண்டுமானால் தெரிவிக்கலாம். மேலும் ஹரி வில்லியம் இணைவார்களா என்று எதிர்பார்ப்பு ராஜ குடும்ப ரசிகர்களுக்கு இன்னமும் இருக்கின்ற நிலையில் மகாராணியாரின் மரணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது குடும்ப பிரச்சினைகள் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக தான் ஹரியை ராஜ குடும்பம் தங்களுடன் இணைத்து இருக்கிறது என்ற ஒரு கருத்தும் நிலவுவதை மறுக்க முடியவில்லை.