தமிழகத்தில் வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று தமிழ் நிலம் என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி tamilnilam.tn.gov.in/citizen- இல் பெயர், செல்போன் எண், முகவரி மற்றும் இ மெயில் முகவரியுடன் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு மற்றும் செயலாக கட்டணங்களை இணைய வழி மூலமாகவே செலுத்த முடியும். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கை விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும்.