அசாம் மாநில துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அப்துல் விஸ்வாஸ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் என்பவர் என்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். என் மகள் வீட்டுக்கு அழுது கொண்டே வந்தார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி கூறினார்.
அந்த நபர் பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டு என்னுடைய குழந்தை அழுத போது அவளுக்கு ரூ.100 பணமும், ஒரு சிப்ஸ் பாக்கெடையும் கையில் கொடுத்து அனுப்பி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த நபரின் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் அவதாரமும் விதித்துள்ளது.