முன்னணி ஆன்லைன் செயலி தனது ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தரமான மீசோ, பிஸியான பண்டிகை விற்பனைக்கு பிறகு தனது ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட விடுமுறையை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பண்டிகை காலத்தில் பரபரப்பான பணிச்சுமைக்கு மத்திய ஊழியர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் விதமாக விடுமுறை அளிக்கப்படுகிறது .அதன்படி அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது.பண்டிகை காலங்களுக்கு பின்னர் மிசோ ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவது இது இரண்டாவது முறை. ஊழியர்களின் மனநலத்தை காப்பதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும்.ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏற்கனவே மீசோ ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊழியர்கள் எங்கிருந்தும் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பகல் நேர பராமரிப்பு நடவடிக்கைகளை சீரமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது இந்நிறுவனம்.அதனைப் போலவே பணிபுரியும் பெற்றோரை ஆதரிப்பதற்காக ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஊழியர்களுக்கு பகல் நேர பராமரிப்பு முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.