கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் போன்ற 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்தல் பிரசாரத்துக்கு செலவழித்த தொகை பற்றிய அறிக்கையை பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளது.
அதன்படி உத்தரபிரதேசத்தில் ரூபாய்.221 கோடி, உத்தரகாண்டில் ரூபாய்.43 கோடியே 67 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூபாய்.36 கோடி, கோவா மாநிலத்தில் ரூபாய்.19 கோடி, மணிப்பூரில் ரூபாய்.23 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவழித்துள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ரூபாய்.194 கோடி செலவிட்டதாக தெரிவித்துள்ளது.