கொரோனா காரணமாக முன்னணி IT நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு தங்களது ஊழியர்களை அழைக்க தயக்கம் காட்டி வருகிறது. இருந்தாலும் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய டி சி எஸ் நிறுவனம்,இந்த உத்தரவை பின்பற்றாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் சுமார் 50,000 ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரிய அழைக்கப்படுவார்கள். படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ & எம்டி ராஜேஷ் கோபிநாதன் கூறியுள்ளார். ஐடி ஊழியர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் பணியாற்றுவது தொடர்பாக புகார் எழுந்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.