மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் போண்டா மணி. இந்த நிலையில் இவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்ததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவருக்கு சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார்.
அப்பொழுது அவரிடம் உறவினர்கள் யாராவது கிட்னி கொடுக்க தயாராக இருந்தாலும் அல்லது யாராவது மூளை சாவடிந்து உறுப்பு தானம் செய்தால் அரசாங்கமே அறுவை சிகிச்சை செய்யும். உங்களுக்கு எந்த செலவும் இருக்காது. உங்களுக்கு தற்பொழுது ஆரம்ப நிலை தான். இன்னும் டயாலிசிஸ் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை. உறவினர்கள் கொடுக்கிறார்களா என கேளுங்கள். கொடுத்தால் உடனே உறுப்பு மாற்று சிகிச்சை செய்து விடலாம்.
மேலும் போண்டாமணியின் கையை பிடித்துக் கொண்டு “பயப்படாதீர்கள், நான் இருக்கிறேன்” என அவருக்கு தைரியம் சொல்லியுள்ளார் அமைச்சர் மா.சுபிரமணியன். அப்பொழுது அமைச்சரிடம் பேசிய போண்டா மணி தன்னை காப்பாற்றி விட்டால் போதும், தான் சம்பாதித்து குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வேன். மேலும் தனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றும் தான் நல்லது தான் செய்திருக்கின்றேன் என கண்ணீருடன் பேசியுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கானமுழு செலவையும்முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது pic.twitter.com/O6M8IPkvQD
— Subramanian.Ma (@Subramanian_ma) September 22, 2022