இனி மொபைலில் இருந்து அனுப்பும் எந்த ஒரு குறுஞ்செய்திக்கும் கட்டணம் வசூலிக்க படாது என ட்ராய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது செல்போன்களில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அனுப்புவதை போல் மொபைலில் மெசேஜ் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் குறைந்தது 100 மெசேஜ் தான் ஒரு நாளைக்கு அனுப்ப முடியும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி,
100 மெசேஜை தாண்டிய பின் ஒரு மெசேஜ்க்கு ரூபாய் 50 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த 50 பைசாவும் இனி வசூலிக்கபடாது என்று டிராய் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெசேஜ் மூலம் அதிகமாக பரவும் spam மெஸேஜ்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை மொபைல் உபயோகிக்கும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.