தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியாமணி கடந்த 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணி அசுரன் பட ரீமேக்கின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதனையடுத்து பிரியாமணி ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியாமணி ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறைக்குள் வந்தபோது சிலர் பிடிக்காத வேலையை செய்ய சொல்லி தொந்தரவு செய்ததாக கூறி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக பிரியாமணி அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் நடித்துக் கொண்டிருந்த படம் பாதி முடிந்தது. அந்த சமயத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகினார்.
அவர் என்னிடம் தொப்புள் அருகே பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறியும் என்னை வற்புறுத்தியதால் வேறு வழியின்றி அதை செய்தேன். சினிமா உலகில் ஹீரோயின்கள் தங்களுக்கு பிடிக்காத வேலையை செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை பிரியாமணி அந்த தயாரிப்பாளரின் பெயரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.