சிவராத்திரி அன்று சிவபக்தர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
வருகின்ற 21 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி வருகின்றது. எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றும், அந்த நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.
அன்றைக்கு சில விஷயங்களை செய்யும் பொழுது கோடான கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என குறிப்பிடப் பட்டிருக்கிறது. மகா சிவராத்திரியன்று இரவில் தூங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏன்னென்றால் நம்முடைய உயிர் சக்தியானது மேலெழும்பும் நாள் என்று கூறுவார்கள் முன்னோர்கள்.
அதனால் அன்றைக்கு தூங்காமல் நிமிர்ந்து, அமர்ந்து இருப்பதும், இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதும், புண்ணியத்தை சேர்க்கும். இந்த மாதிரி செயல்களில் ஈடுபடும் பொழுது கட்டாயமாக நம்மிடையே புதிய மாற்றமானது ஏற்படும்.
நாம் யார் என்பதையும் உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். அன்றைய தினம் தூங்காமல் இருப்பது ரொம்பவே சிறப்பு. முடிந்த அளவிற்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் நடக்கக்கூடிய பூஜைகள் மற்றும் சிவனின் பெருமைகளை கேட்பதும் பலகோடி புண்ணியங்களையும் நமக்கு உண்டாகும்.
பக்கத்தில் கோவிலுக்கு எல்லாம் போக முடியாது அப்படின்னு நினைக்கிறவங்க வீட்டிலேயே சிவபூஜை செய்து வழிபட்டு கொள்ளலாம். வீட்டிலேயே திருவாசகம், தேவாரம் தொடர்ந்து படித்துக் கொண்டு விடிய, விடிய கண்விழித்து கொண்டு இருப்பதும், அதே அளவு பலனை உங்களுக்கு உண்டாகும்.
சிவராத்திரி அன்று கோவில்களில், சிவாலயங்களில் சென்று உழவாரப் பணியில் ஈடுபடுவது மிகவும் பெரிய பாக்கியத்தை உங்களுக்கு உண்டாகும். கோவிலுக்கு சென்று கோவிலை தூய்மைப்படுத்தும் விஷயங்களைச் செய்தால் கண்டிப்பாக அந்த சிவனருள் மட்டுமில்லாமல் சிவன் அடியார்களின் வாழ்த்துக்களும் உங்களுக்கு வந்து சேரும்.
நீங்கள் நினைத்தது நடக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். அன்றைய தினம் சிவனுக்கு நடக்கக்கூடிய பூஜைகள் அனைத்திலும் கலந்து கொள்ளுங்கள். இன்றைக்கு பூஜைகளில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் அங்கு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்தால் கட்டாயம் உங்களுக்கு நன்மை நடைபெறும்.
சிவன் அபிஷேகப்பிரியர் என்று சொல்வார்கள். அபிஷேக பொருட்கள் பல்வேறு விதமாக இருக்கிறது. பால், தயிர், நெய் இப்படி சொல்லி கொண்டே போகலாம். இதில் ஏதாவது ஒன்று வாங்கிக்கொண்டு போய் அந்த பூஜையில் கொடுப்பது ரொம்ப நல்லது, மறந்துடாதீங்க.
இப்போ சொல்ல போறது ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா..? சிவராத்திரி அப்படிங்கிறது விழித்திருப்பது மட்டுமில்லை, உள் முகமானது நாம் விழித்திருந்து பார்க்க வேண்டும். கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
நீங்கள் யார் என்பதை உணர்ந்து கொள்வதற்கு சரியான நாள் இதுவே ஆகும். இந்த அதற்கு வழி காட்ட நமக்கு நிறைய குருக்கள் இருக்கிறார்கள். அந்த குருவைப் பணிந்து அன்று அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு மாற்றத்தை வாழ்க்கையில் ஏற்படுத்தும் என சொல்லப்பட்டிருக்கிறது..
அன்றைய தினம் சிவன் அடியார்களுக்கு தொண்டு செய்வது ரொம்பவே சிறப்பான விஷயம். சிவனடியார்கள் மற்றவர்களுக்கு உதவி புரியும் நபராகவே இருப்பார்கள்.ஆனால் அன்றைக்கு நாம் அவர்களுக்கு உதவிகள் பல செய்து பெரும் பாக்கியத்தை பெற்று கொள்ளலாம்.
சிவனடியார்களுக்கு முடிந்த அளவு அன்னதானம், சேவைகள் செய்வதனால் பெரும் பாக்கியத்தை நமக்கு அளிக்கும். என்பதை அந்த நேரத்தில் மறந்துவிடாதீர்கள். முக்கியமான ஒன்று சிவராத்திரி அன்று காலையிலிருந்து சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதும், அதே போல குறைந்தது ஒரு வருடமாவது சிவனின் பெருமைகளை பேசுவது சிறந்த ஒன்று.
சிவன் அடியார்களின் செயல்களை நாம் நிறைய கேட்டு தெரிந்து கொள்வோம்..அவரை பற்றி பேசுவதற்கான வாய்ப்பு மற்றும் பாக்கியமும் நமக்கு கிடைப்பது நல்லது. அந்த நாளில் சிவனின் அருமை, பெருமையை தெரிந்து கொள்ளாத நபரிடம், அவரோட அருமைகளை பற்றி பேசுவது மகா புண்ணியத்தை உங்களுக்கு உண்டாக்கித் தரும்.
நம் மூலமாக சிவனின் பெருமைகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ளுவதால் அது நமக்கு பெரும் புண்ணியமாகும்.சிவனை பெரும்பாலும் வழிபடுபவர்கள், தானென்று அகங்காரத்தை அழித்து உள்ளே இருக்கக்கூடிய ஆத்மாவை உணரவேண்டும். அதற்குள் இருக்கும் இறைவனை உணர வேண்டும்.
அப்படி பட்டவங்க தான் அதிகபட்சமாக சிவனை விடாமல் பிடித்து இருப்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு ஒரு தலையாய கடமை என்னன்னா நம்ம மட்டும் அந்த இன்பத்தை அனுபவிக்க கூடாது,
அடியார்களே நல்ல தெரிஞ்சுக்கோங்க நாம் தெரிந்து கொண்டது இல்லை இவைகளை பற்றி.தெரிந்து கொள்ள முற்படுகின்ற ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் அந்த நல்வழியில் பாதையில் அழைக்க வேண்டும் என்பதே, நம்முடைய அடிப்படை கடமை என்பதை மறந்துவிடவேண்டாம்.
சிவனை வழிபடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை நண்பர்களிடமோ அல்லது உற்றார் உறவினர்களிடமும் எடுத்துக்கூறி மேலும் சிவனின் மீது அருளை பெறுவது நம் கடமை. அவரை எளிதில் ஆட்கொண்டு விடுவார் முதல் படி மட்டும் தான் நாம் எடுத்து வைக்க வேண்டும்.
பின் சிவனே நம்மை கையை பிடிச்சு கூட்டிக் கொண்டு போய்விடுவார். மற்றவர்களுக்கு வழிகாட்டினால் அதுவே நமக்கு பெரிய புண்ணியத்தை ஏற்படுத்தி தரும். எல்லாத்துக்கும் மேல ஒரு விஷயத்தை நம்ம பண்ண வேண்டியது இருக்கு, அது என்னன்னா பெரிய, பெரிய கோவில்களில் எல்லாம் சிவராத்திரி விழா ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
நம்ம வீட்டிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய ரொம்ப பழமையான சிவன் கோவில்கள் இருந்தால், அங்கு சிவராத்திரி வழிபாடு செய்ய முடியாமல் இருக்கிறார்கள் என்றால், யார் ஒருவர் முன்னின்று அதை செய்கின்றார்களோ, அந்த சிவராத்திரி விழாவை அங்கு சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்களோ, நம்மளால தனியா முடியலையா ஒரு பத்து பதினைந்து பேர் அந்த சிவராத்திரி கோவில் விழாவை விமர்சியாகவும் கொண்டாடலாம்.
அன்று விரதத்தை கடைபிடித்து ஏற்பாடுகள் செய்யலாம் அப்படி செய்தோம் என்றால் அதைவிட பெரிய புண்ணியம் எதுவுமே உங்களுக்கு கிடைக்காது.. அருகாமையில் இருக்கக்கூடிய சிவாலயங்களில் சிவ வழிபாட்டை உறுதி செய்வதை கட்டாயமாக மேற்கொள்ளுங்கள், நீங்கள் நினைத்தது நடக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும்.
இதை எல்லாம் தாண்டி கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், வீட்டிலேயே சிவன் வழிபாட்டை செய்யலாம். ஆனால் வீட்டில் சிவ வழிபாடு செய்யும் பொழுது தேவாரம், திருவாசகம் இந்த மாதிரி பன்னிரு திருமுறைகள் இருக்கின்றது. அதை பாடிய கட்டாயமாக இந்த சிவ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது அனைத்து பலன்களும் உங்களைத் தேடிவரும்.