திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்காரன் பட்டி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் சேவல்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். இந்த பள்ளிக்குள் நுழைஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (57) என்பவர் சென்றுள்ளார். இவர் மாணவியிடம் தான் ஒரு சமூக சேவகர் என்றும், பள்ளியில் போடும் மதிய உணவு மற்றும் கழிவறைகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு மாணவியிடம் ஒரு பாத்திரத்தில் மதிய உணவு வாங்கி வரச் சொல்லி அதை முதியவர் சாப்பிட்டுள்ளார். அந்த சாப்பாடு பாத்திரத்தை முதியவர் கொடுக்கும்போது அதில் ஒரு கடிதத்தையும், பிஸ்கட் பாக்கெட்டையும் வைத்துள்ளார்.
இந்த காதல் கடிதம் குறித்து முதியவரிடம் மாணவி கேள்வி எழுப்பியதோடு அதை கிழித்து வீசியுள்ளார். இந்நிலையில் மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது முதியவர் வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி முதியோர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த மணப்பாரை மகளிர் காவல்துறையினர் வெற்றிவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் மாணவிக்கு ஒரு முதியவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.