தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் படக் குழுவினர் குந்தவை மற்றும் பூங்குழலி கதாபாத்திரம் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் நடிகை திரிஷா கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் நாங்கள் பதற்றமாகவே இருந்தோம். ஐஸ்வர்யா ராய், த்ரிஷாவாக இல்லாமல் நந்தினி மற்றும் குந்தவையாகவே எப்போதும் இருந்தோம். நானும் ஐஸ்வர்யாவும் படப்பிடிப்பு தளத்தில் பேசினால் மணி சார் 2 பேரையும் பேசாதீர்கள் என்பார். ஏனெனில் நந்தினியும், குந்தவையும் நண்பர்களாக இருக்க முடியாது. அதனால் அதிகம் பேசக்கூடாது என்பார். உங்களுடைய கதாபாத்திரத்திற்காவது உங்களிடைய சிறிது போட்டி இருக்க வேண்டும் என்பார் என்று கூறியுள்ளார்.
A glimpse into the creation of Kundavai & Poonguzhali from #PS1 ✨
▶️ https://t.co/uQCkvx4Vbu#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @trishtrashers #AishwaryaLekshmi pic.twitter.com/Y6hkuSztP0
— Lyca Productions (@LycaProductions) September 22, 2022