Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளக்காதலியுடன் தகராறு….. “கொலை செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்”…. 5 பேர் கைது….!!!!!!

முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சந்தனகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஜெயக்குமார் என்ற மனைவியும் பரத் என்ற மகனும் இருக்கின்றார்கள். பூங்காவனம் வட்டி கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றார். இதனால் இவருக்கு பல்வேறு இடங்களில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே 5 பேர் கொண்ட கும்பல் பூங்காவனத்தை மூங்கில் கட்டையால் ஓட ஓட அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடு உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பூங்காவனத்திற்கும் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்பொழுது சண்முகம் மற்றும் அவரின் உறவினர்களான ராஜசேகர், அண்ணாதுரை, ஜெகதீஷ், ஜெயவேல் உள்ளிடோர் பூங்காவனத்தை அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்கள்.

அவர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்கள். இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது, கொலை செய்யப்பட்ட பூங்காவனத்திற்கும் ராஜலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. பூங்காவனம் ராஜலட்சுமி மூலமாக பணத்தை வட்டிக்கு கொடுத்து வசூல் செய்து வந்துள்ளார். இதில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட பொழுது பூங்காவனத்தை ராஜலட்சுமி கணவர் மற்றும் அவரின் சகோதரர் ராஜசேகர் கண்டித்துள்ளார்கள். ஆனால் பூங்காவனம் தொடர்ந்து தகராறு செய்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

Categories

Tech |