உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் ஆடைகளை களைந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை நிர்வாணமாக நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் ரத்த வெள்ளத்தில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து செல்கிறார். ஆனால் சாலையில் சென்றவர்கள் சிறுமியை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றார்களே தவிர சிறுமிக்கு யாரும் உதவவில்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு திரும்பிய பிறகு அவரை பெற்றோர்கள் விசாரித்ததில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் காதுகளுக்கு போகவே அவரின் உத்தரவின் பெயரில் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் வழக்கில் ஒருவர் செப்டம்பர் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
A girl was gang raped and paraded naked in #MORADABAD, #UttarPradesh.
Didn't @BJP4India come to power in 2014 on one of the factors being women safety after the #Nirbhaya issue?Video courtesy – Unseen India pic.twitter.com/A6AOz1Fh04
— Sanghamitra Bandyopadhyay (@AITCSanghamitra) September 21, 2022