தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கும். இதனிடையே பெரும்பாலான ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு மற்றும் உப்பு போன்ற பொருட்களையும் வாங்கச் சொல்லி ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களை கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
அதனால் பொது மக்களை இவ்வாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி எச்சரித்துள்ளார்.அதன்படி ரேஷன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் பொதுமக்களை வற்புறுத்தக் கூடாது. அப்படி செய்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மக்களும் புகார் அளிக்கலாம்.