Categories
மாநில செய்திகள்

6 -9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. இந்த வகுப்புகள் கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு கலை மற்றும் பண்பாட்டு பாடங்கள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இயல், இசை, நாடகம், நாட்டுப்புற மற்றும் காட்சிகளை உள்ளிட்ட கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இந்த செயல்பாடுகளில் பங்கேற்பதற்காக அவர்களின் பள்ளி கால அட்டவணையில் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது .

மேலும் extra curricular activities எனப்படும் இந்த பாடங்களை மாணவர்களுக்கு சிறப்பாக போதிக்கும் வகையில் இந்த துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த கலைஞர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்து கலந்து கொள்ளலாம். இதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மேலும் இந்த திட்டத்திற்கு அருகில் உள்ள கலைஞர்களை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.இதற்கு முன்னதாக நடப்பு கல்வியாண்டில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நீதி போதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கலை மற்றும் பண்பாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |