செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு பாஜகவினர் படாதபாடு படுகிறார்கள். ஆ.ராசா ஹிந்து தானே. அவர் அங்கே இருக்கிற அழுக்கை, அவலத்தை, அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார். அவருக்கு அந்த உரிமை இருக்கு. சொல்லி இருக்காரு. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாஜகவினருக்கு உரிமை இருக்கிறது நடத்தட்டும்.இதை விவாதிப்பதற்கு ஆ.ராசா தயாராக இருக்கிறார். அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறவர்கள். ஆ.ராசாவோடு விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்களா? என்பது தான் கேள்வி.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக நாலு இடங்களில் வந்தது அண்ணா திமுகவின் தயவு. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து தமிழர்களுக்கு வந்தது ? நான் கேட்கிறேன், இலங்கை தமிழர்கள் இன்றைக்கும் கைது செய்யப்படுகிறார்கள். என்னுடைய கடலிலே எங்கள் மீனவர்கள் ஏன் மீன் பிடிக்க முடியவில்லை ? இலங்கை புதைந்து கொண்டிருக்கிறது, சிதைந்து கொண்டிருக்கிறது, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் கூட எங்கள் தமிழர்களை கைது செய்கிறான்.
எதுக்கு உனக்கு ஓட்டு போடணும் ? நீ 340 ரூபாய்க்கு விற்ற கேஸ் சிலிண்டரை ரூபாய் 1150க்கு தரதுக்கா? இல்லை. பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடியதற்கா ? இந்தியாவினுடைய ரயில்வேயை குட்டிச் சுவராக்கியதற்கா? இந்தியாவினுடைய நிதி நிலைமையை பாழாக்கியதற்கா ? பணவீக்கத்தை கொண்டு வந்ததற்கா ? பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியம், ஒரு தமிழனை என்பதை விட ஒரு வாக்காளனுக்கு எப்படி வரும் ? ஒரு தொகுதியில் கூட பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற என்னம் வராது என தெரிவித்தார்.