Categories
மாநில செய்திகள்

அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல்… பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது 2022  – 23 ஆம் வருடத்திற்கான நேரடி வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் ஆனது வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் நடப்பாண்டில் பள்ளி குழந்தைகளுக்கு இடையே காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் பள்ளிகளில் குழந்தைகள் வருகை சற்று குறைந்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்திருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றார்கள்.

அதன் காரணமாக காய்ச்சலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறி இருப்பதாவது தமிழகத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்திருப்பதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த காய்ச்சல் மூன்று நாட்களுக்குள் சரியாக விடும் என்ற காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால் மாணவர்களுக்கிடையே கற்றல் பாதிப்பு தான் ஏற்படும். இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை பற்றி 14417 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |