திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, அதிமுகவில் எங்க ஊர்ல.. எங்க மாவட்டத்துல இருந்து ஒருத்தன் இருக்கான் சிவி.சண்முகம். சிவி சண்முகம் அவரு. சீவுறரா ? இல்லையாங்கிறது யாருக்கும் தெரியாது. எப்படி இருக்காருன்னு உங்களுக்கு தெரியும். அந்த சி வி சண்முகம் ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசி இருக்காரு… தலைவரை பத்தி தர குறைவாக ஒருமையில் பேசி இருக்காரு. ஸ்டாலின் என்னை இத கூட புடுங்க முடியாது அப்படின்னு பேசுறாங்க. ஒரு மந்திரியா இருந்தவன், ஒரு சட்டத்துறை அமைச்சரா இருந்தவன்.
பத்திரிக்கை எல்லாம் பார்த்திருப்பீங்க, டிவி எல்லாம் பார்த்திருப்பீங்க. ராஜசபா எம்.பி பேசுறாரு ஸ்டாலின் என்னுடைய மயிரை கூட புடுங்க முடியாதுன்னு சொல்லுறன். எனக்கு அந்த வார்த்தை சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. இவ்வளவு பெரிய கூட்டத்துல, இந்த இடத்துல… அந்த மாதிரி ஒருத்தன் பேசுறான். அதுவும் பேசுற வேகம் உங்களுக்கு தெரியும். எப்படி பேசுவான் என்று ?
சிவி.சண்முகம் செயல்ல ஒன்னும் கிடையாது. எனக்கு தெரியும் அவரை பத்தி. எங்க மாவட்டம் தான். பேச்சு தான் ஒண்ணுமே நடக்காது. செயல்ல வீரனா இருந்தால், அன்னைக்கு டாக்டர் ராமதாஸ் வழக்கு போட்டிருந்த போது கட்டிலுக்கு அடியில் போய் பூந்துக்கிடக்க மாட்டான். இன்னைக்கு வாடா என நம் தலைவரை கூப்பிடுறான். அன்னைக்கு எங்கடா போன ?
ராமதாஸ் உன் மேல கேஸ் போட்டு, அன்னைக்கு ஆள தேடிட்டு இருந்தாங்களே, அன்னைக்கு கீழ போய் பூந்துக்கிட்டே… எதனால் ? ஒரே சமுதாயத்தினால் சேர்ந்தவர்களாலே பழிவாங்கப்பட்ட நீ, இன்று எங்கள் தளபதியை பார்த்து, தமிழக மட்டுமல்ல உலகத்திலேயே இருக்கிற தமிழர்கள் எல்லாம் இவரைப் போல் உண்டா என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில்… இந்த மாதிரி வார்த்தை எல்லாம் எங்களுக்கு மேடையில பேசி பழக்கம் இல்ல. ஆனா இப்ப பேச வைக்கிறாங்க எங்களை என தெரிவித்தார்.