பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுரவல்லி கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவழகன் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு அறிவழகன் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அறிவழக்கனுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.