காவேரி வேளாண் மண்டலமாக கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு கொள்கை முடிவு எடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.