Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் RSS பேரணி…! ADMK கருத்து சொல்ல விரும்பல… புது விளக்கம் கொடுத்த டி.ஜெ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்தது நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவு குறித்து யாரும் விமர்சனம் செய்ய முடியாது. சில கண்டிஷன்களோட கொடுத்திருக்காங்க. அதாவது எந்த கம்பமும் ஏந்தி செல்லக்கூடாது, அதேபோன்று பல நிபந்தனைகள் போட்டு இருக்காங்க. நீதிமன்ற உத்தரவு என்று சொல்லும்போது,  அது குறித்து எங்களுடைய கருத்தை நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

அப்படி கருத்து கூறினால் அது நீதிமன்றத்தை விமர்சனம் செய்வதாக்கிவிடும். இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. கண்டனம் வருகின்ற அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கின்ற சூழ்நிலையில்,  தான் இருக்கின்றோம். ஆகவே நீதிமன்ற உத்தரவு குறித்து நாங்க என்ன கருத்து சொல்ல முடியும் ? சீமானுடைய கட்சியினுடைய கருத்தை அவர் சொல்றாரு. எங்களுடைய கட்சியினுடைய கருத்து என்பது இது நீதிமன்றம் அனுமதிச்சி அவ்வளவுதான்.

திமுகவை பொறுத்தவரை இரட்டை வேடம். அவங்க பொதுவாவே முதுகுல குத்துற ஆளு. இஸ்லாமியராக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ சகோதரரே இருந்தாலும் சரி, முதுகில் குத்தி பழக்கம். ஆனால் தேர்தல்  நேரத்துல எங்களை காட்டிலும் உங்களுடன் நண்பர்களாக இருக்க முடியாது என்பார்கள். உண்மையிலே தோளோடு தோல் நிற்கிற ஒரு நண்பர்னு சொன்னா ? அனைத்து இந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்.

வடக்கே பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது எந்த ஒரு பிரச்சனையும் தமிழ்நாட்டில் இருந்ததா ? இந்துக்களும் சரி, இஸ்லாமியர்களும் சரி, கிறிஸ்தவ சமுதாய மக்களும் சரி ஒன்றுபட்ட சகோதரர்களாக வாழ்ந்து ஒரு சின்ன சம்பவம் கூட நடக்கல. சட்ட ஒழுங்கு அந்த மாதிரி இரும்பு கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி எந்த பிரச்சனையும் வராமல் பொதுமக்களுக்கு அமைதியை கொடுத்தார்.  யாரு ? நம்முடைய புரட்சித்தலைவி அம்மா என தெரிவித்தார்.

Categories

Tech |