Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் நடை பயணம்..! உற்சாகம், எழுச்சி… சனாதன சக்திகளை விரட்டும்… திருமாவளவன் நம்பிக்கை ..!!

செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் இல்ல, அகில இந்திய அரசியலில் ராகுலின் நடைபயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். சோர்வடைந்திருந்த காங்கிரஸ்காரர்களுக்குக்கு ஒரு உற்சாகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தும் என்பதை தாண்டி,  சனாதன சக்திகளுக்கு எதிராக யார் தான் குரல் கொடுப்பது ? யார் தலைமையில் தான் அணி திரண்டு நிற்பது ? என்று கேள்வி இருந்தது, வெற்றிடம் இருந்தது.

அதை நிரப்பக்கூடிய வகையில் ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை பயணம் அமையும் என்று நான் நம்புகிறேன், அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளில் இருந்து, காங்கிரஸ் மீதும், ராகுல் மீதும் நம்பிக்கையோடு அணி திரள்வார்கள், சனாதன சக்திகளை விரட்டி அடிப்பார்கள், அதற்கு இந்த பயணம் வழிவகுக்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |