Categories
தேசிய செய்திகள்

இனி கார் பேக் சீட்டுக்கும் அலாரம் கட்டாயம்….. மத்திய அரசு திடீர் முடிவு…..!!!!!

கார்களின் பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கு அலாரம் வைப்பதை மத்திய அரசு கட்டாயமாக திட்டமிட்டுள்ளது.இதற்காக மக்கள் அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது காரின் முன் இருக்கையில் சீட்டு பெல்ட் அறிவது கட்டாயமாக உள்ளது. அப்படி அணியவில்லை என்றால் சீட் பெல்ட்டில் அலாரம் ஒலிக்கும்.அதனைப் போலவே பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கும் இதை கட்டாயமாக அரசு முடிவு செய்து அதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

இதை வாகன தயாரிப்பு விதிகளுக்கான தரக்கட்டுப்பாடு விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதனால் இனி கார்கள் தயாிக்கப்படும் போதே பின் சீட்டிற்கான சீட் பெல்ட் அலாரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் இனி கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்கள் எந்த சீட்டில் அமர்ந்திருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

Categories

Tech |