Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை…. முதல்முறையாக மனம்திறந்த பிரேமலதா வேதனை….!!!!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர் தான் விஜயகாந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சினிமாவில் அசத்தியதைப் போலவே அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். ஆனால் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வருகிறார்.அண்மையில் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்ற வந்திருந்தபோது இவரின் நிலையை கண்டு பலரும் கண்கலங்கினர். இந்நிலையில் விஜயகாந்துக்கு என்ன பிரச்சனை என்பதை முதன் முறையாக அவரின் மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .

அதில், அவருக்கு தொடர்ந்து தேவையான சிகிச்சை செய்து வருகிறோம்.இருப்பினும் அவருக்கு நடப்பதிலும் பேசுவதிலும் கொஞ்சம் குறைபாடு உள்ளது. ஆனால் இது விரைவில் சரியாகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஒருவரை இப்படி பார்க்கும்போது வேதனையாக தான் உள்ளது. ஓடி ஓடி உழைத்த அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார் என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார். இது தற்போது அவரின் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |