Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய மனைவி…. ஆத்திரத்தில் கணவனின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வசந்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு கண்ணன் தனது மனைவியிடம் நீ மற்றவர்களுடன் செல்போனில் இனி பேசக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வசந்தி கோபித்துகொண்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

அதன்பின் வசந்தி மறுபடியும் தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வசந்தி செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனை பார்த்த கண்ணன் கோபமடைந்து அரிவாளால் வசந்தியை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது வசந்தி அரிவாளால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் வசந்தியை உடனடியாக மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வசந்தி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |