தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகையாகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தன்னுடைய வீட்டில் நிலைமை சரியில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய twitter பக்கத்தில் கூறியிருந்தார். அதாவது லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள் ஸ்ரீயாவுக்கு உடல்நலம் சரியில்லை. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய மகளுடன் இருக்கும் போட்டோவை தற்போது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலத்திற்குப் பிறகு என்னுடைய மகளின் கருப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த நீர்க்கட்டி மருத்துவர்களின் அறிவுரைப்படி லேப்ரோஸ்கோபி மூலமாக அகற்றப்பட்டது.
ஆனால் 6 மாதங்கள் ஆகியும் என்னுடைய மகளுக்கு உடல் நலம் சரியாகவில்லை. ஆனால் விரைவில் சரியாகி விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிலர் அறிவுரையை கேட்காமல் அறுவை சிகிச்சை செய்தது மிகப்பெரிய தவறு என்பதை தற்போது நான் புரிந்து கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்க கவலைப்படாதீங்க மேடம். கண்டிப்பாக உங்க மகளுக்கு சீக்கிரமா சரியாகிடும். நாங்க கடவுள் கிட்ட பிரார்த்தனை செய்றோம். கடவுளை விட சிறந்த மருத்துவர் இல்லை உங்கள் மகள் விரைவில் குணமடைந்து விடுவார் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.