Categories
சினிமா தமிழ் சினிமா

தடயத்தை அழித்து விட்டார்களா…? நடிகை ஜெசிகா தற்கொலையில் புதிய திருப்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் மற்றும் வாய்தா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஜெசிகா. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஜெசிகா சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை ஜெசிகா அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜெசிகாவின் காதலன் தயாரிப்பாளர் சிராஜுதனாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இவர் 4 செல்போன்களை பயன்படுத்திய நிலையில், 3 செல்போன்கள் மட்டுமே காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.  இதில் ஒரே ஒரு ஐபோன் மட்டும் மாயமாகியுள்ளது. இந்த ஐபோனின் சிம் கார்டை வைத்து கால் ஹிஸ்டரியை போலீசார் சேகரித்தனர். அதில் சிராஜுதனிடம் கடைசியாக ஜெசிகா வாக்குவாதம் செய்தது பதிவாகி இருந்தது. இதன் காரணமாக சிராஜுதீனை விசாரணை செய்வதற்காக போலீசார் அவரை தொடர்பு கொண்ட போது காரைக்குடியில் பட வேலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் சிராஜுதன் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்கு வருமாறு நேரில் சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சிராஜுதன் இன்று இரவு சென்னை திரும்பி விடுவார். இதனையடுத்து நாளை சிராஜுதன் நேரில் போலீசார் விசாரணைக்கு ஆஜராவார். இவரிடம் விசாரணை நடத்திய பிறகு ஜெசிகா மரணத்தில் இருக்கும் உண்மைகள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெசிகா சிராஜுதனிடம் கோபமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளதால் சிராஜுதன், பிரபாகரன் என்பவருக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு ஜெசிகா வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் பிரபாகரன் வீட்டிற்கு செல்வதற்குள் ஜெசிகா தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் பிரபாகரன் ஜெசிகா இறந்த தகவலை சிராஜுதனுக்கு கூறியுள்ளார். அதன் பிறகு தான் ஜெசிகா பயன்படுத்திய ஐபோன் மாயமாகியுள்ளது. அதோடு ஜெசிகா இறந்து 20 மணி நேரம் கழித்து தான் பிரபாகரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த 20 நிமிடத்திற்குள் தான் ஜெசிகாவின் மரணத்தில் உள்ள தடயங்களை அழித்ததிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறுகின்றனர்.

Categories

Tech |