கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகின்றது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, பைபாஸ் சாலை, கோட்டக்கரை, பிரித்விநகர், முனுசாமிநகர், பூபாலன்நகர், மங்காவரம், ஆத்துப்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம், ம.பொ.சி.நகர், பெத்திக்குப்பம், சாமிரெட்டிகண்டிகை, வேற்காடு, ரெட்டம்பேடு சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், அயநல்லூர். சோழியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவியகரம், பெரியநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நாளை இருக்காது. இதனை மின் துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.