ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டிதொடரானது வங்காளதேசத்தில் வைத்து நடைபெறயிருக்கிறது. அந்நாட்டிலுள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மோதுகிறது. ஆசிய கோப்பைக்கான பெண்கள் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணையானது இப்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்த போட்டி வருகிற அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் விபரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்திஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாகூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.