ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும்போது கூடுதல் வருமானத்திற்காக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்றுவது தான் moonlighting.இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஆரம்பம் முதலே இது குறித்து கடுமையாக எச்சரித்து வந்தது. ஆனால் தற்போது விப்ரோ நிறுவனம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி விப்ரோ நிர்வாகம் சுமார் 300 ஊழியர்கள் தனது சக போட்டியில் நிறுவனங்களுக்கு பணியில் இருந்து கொண்டே வேலை செய்து வந்ததை கண்டுபிடித்துள்ளது.இந்த 300 ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கி உள்ளதாக விப்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.