அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக டாங்கோ நடன போட்டியின் இரண்டு பிரிவுகளில் அந்த நாட்டு நடன கலைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலைநகர் பியூனர்ஸ் அயர்ஸில் நடைபெற்று வந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து டாங்கோ நடன கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை அரங்கேற்று உள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் மேடை அமைத்து நடன அரங்குகளில் நடத்த போட்டிகளை ஏராளமானவர்கள் திரண்டு ரசித்துள்ளனர். குழுவாகவும் இணையாகவும் ஆடிய நடன கலைஞர்களிலிருந்து இறுதி சுற்றுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பட கோனியா நகரை சேர்ந்த செபாஸ்டியன் சிந்தியா இணை தங்களது அற்புதமான ஆட்டத்தால் முதல் பரிசை தட்டி சென்றுள்ளது.
மேலும் மற்றொரு பிரிவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் நடன திறமையால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர். இதில் அர்ஜென்டினாவின் பெர்காமினோ நகரைச் சேர்ந்த ரெகார்ட்னோ- காஸ்டன்சா இணை அற்புதமாக சுழன்றாடி வெற்றியை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர். இந்த வருடம் நடைபெற்ற டாங்கோ நடன போட்டிகளை நகரின் ஒரு மையத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் கண்டு ரசித்ததாக அர்ஜென்டினா கலாச்சார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் கொரானா அச்சம் நீங்கியதை தொடர்ந்து இந்த வருடம் உலக டாங்கோ நடன போட்டியை பார்வையாளர்கள் எந்தவித தடையும் இல்லாமல் ரசித்துள்ளனர். கடந்த வருடம் வெளிநாட்டு நடன கலைஞர்கள் வீடியோ செயலி மூலமாக போட்டியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்